Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ... வைகாசி சஷ்டி; பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் வைகாசி சஷ்டி; பால தண்டாயுதபாணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சையில் ஒரே இடத்தில் 27 பெருமாள்கள் கருடசேவை; பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தஞ்சையில் ஒரே இடத்தில் 27 பெருமாள்கள் கருடசேவை; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2026
10:06

தஞ்சாவூா்; வைகாசி திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு தஞ்சையில் உள்ள பெருமாள் கோவில்களில் இருந்து 27 பெருமாள்களின் கருடசேவை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.


ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் தஞ்சையில் உள்ள பெருமாள் கோவில்களில் இருக்கும் உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் 27 பெருமாள்கள் கருடசேவை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, தஞ்சையில் உள்ள வைணவ கோவில்களில் முதன்மை யானதாக விளங்கும் வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள் கோவிலில் 92-வது ஆண்டு கருட சேவை நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை சார்பில் 92-ம் ஆண்டு கருட சேவை வீதிஉலா சிறப்பாக நடைபெற்றது.


முன்னதாக காலை 6 மணிக்கு தஞ்சாவூர் மாநகரில் அமைந்துள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் இருந்து 27 பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி வெண்ணாற்றங்கரை மணிக்குன்ற பெருமாள் கோவிலுக்கு வந்தனர். பின்னர், அங்கிருந்து தஞ்சை நீலமேகப்பெருமாள் கோவில், மணிகுன்றப்பெருமாள் கோவில், மேல சிங்கப்பெருமாள் கோவில், வேளூர் வரதராஜர் கோவில், கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில், கலியுக வெங்கடேச பெருமாள் கோவில், வரதராஜபெருமாள், நவநீதகிருஷ்ணன், மேலவாசல் ரெங்கநாதர், விஜய ராமர், கோவிந்தராஜ பெருமாள், ஜனார்த்தன பெருமாள், பிரசன்ன வெங்கடேச பெருமாள், கீழ கோதண்டராமர், கீழ சிங்கபெருமாள், பூலோக கிருஷ்ணர், படித்துறை வெங்கடேசப்பெருமாள், பஜார் ராமர் கோவில் உள்பட 27 கோவில்களில் இருந்து கருட வாகனத்தில் பெருமாள் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, கொடிமரத்து மூலை, கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தது.


நாளை நவநீத சேவை; இந்த 27 கருட சேவையை தரிசித்தால் 4 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்பதும், கருட சேவை தரிசனம் சகல தோஷநிவர்த்தி தரும் என்பதும் பக்தர்களின் ஐதீகம். இந்த கருட சேவையின் போது பக்தர்கள் பெருமாள்களுக்கு தேங்காய், பழம் வழங்கி அர்ச்சனை செய்து வழிபட்டனர். கருட சேவைக்கு முன்னர் பக்தர்கள் பாடல்களை பாடியவாறு சென்றனர். பின்னர், பெருமாள்கள் அங்கிருந்து புறப்பட்டு அந்தந்த கோவில்களை சென்றடைந்தனர். இந்த கருட சேவையில் தஞ்சை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து, நாளை (ஞாயிற்றுக்கிழமை) 18 நவநீத சேவை வைபவமும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) விடையாற்றி விழாவும் நடைபெற உள்ளன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar