சிங்காநல்லூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2026 09:06
கோவை சிங்காநல்லூர் ஸ்ரீ உலகளந்த பெருமாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீ த்ரிவிக்ரம நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று (07.06 2026) கோலாகலமாக நடந்தது. இதில் வேத ஆகமப்படி பட்டாச்சார்யாரகள் ஏழு நிலைகள் கொண்ட கும்ப கலசங்களுக்கு புனித நீரை ஊற்றினர்.
கோவை மாவட்டத்தில் ஏழு நிலைகள் கொண்ட ஒரே வைணவ கோவில் இந்தக் கோயில் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்று விண்ணைப் பிளக்கும் கோஷத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்வையொட்டி உற்சவர் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கும்பாபிஷேகத்தை முன்னிட்டுகோவை மற்றும் பொள்ளாச்சி, உடுமலை, அன்னூர், மேட்டுப்பாளையம், பல்லடம், அவிநாசி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.