மாமல்லபுரம் கடம்பாடி கோவிலில் ரூ.4 லட்சம் காணிக்கை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2026 05:06
மாமல்லபுரம்: கடம்பாடி மாரிசின்னம்மன் கோவில் உண்டியலில், 4.57 லட்சம் ரூபாய் காணிக்கை பெறப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியில், மாரி சின்னம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் உண்டியலில், பக்தர்கள் செலுத்தியுள்ள காணிக்கைகள், சரக ஆய்வாளர் பாஸ்கரன், செயல் அலுவலர் செல்வகுமார் ஆகியோர் மேற்பார்வையில், நேற்று கணக்கிடப்பட்டது. இதில், 4.57 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.