வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2026 06:06
வில்லிவாக்கம்: வில்லிவாக்கத்தில், சவுமிய தாமோதர பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோத்சவ திருவிழா நடந்து வருகிறது. விழாவின் ஏழாவது நாளான இன்று காலை 8:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சவுமிய தாமோதர பெருமாள் எழுந்தருளினார். பக்தர்கள், வடம் பிடித்து தேரை இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வந்த பெருமாளை, பக்தர்கள் வழிபட்டனர். இரவு 8:00 மணிக்கு நடந்த கேடய உத்சவத்தில், சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி, சிறிய மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.