வாடிப்பட்டி காளியம்மன் கோயிலில் வைகாசி உற்ஸவம்; அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2026 07:06
வாடிப்பட்டி: பரவை அண்ணா நகரில் காளியம்மன் கோயில் வைகாசி உற்ஸவம் நடந்தது. சந்தன மாரியம்மன் பஜனை குழுவினரின் விளக்கு பூஜை, அன்னதான குழு சார்பில் அன்னதானம் நடந்தன. பக்தர்கள் சக்தி கரகம், அக்னிசட்டி, பால்குடம், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். காளியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் வந்தார். நேற்றுமுன்தினம் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்துச் சென்று வைகை ஆற்றில் கரைத்தனர். அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.