Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி கங்கையம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரபாஞ்சாலியம்மனுக்கு திருக்கல்யாணம் மொறப்பாக்கத்தில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
வீரபாஞ்சாலியம்மனுக்கு திருக்கல்யாணம் மொறப்பாக்கத்தில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2026
05:06

 மதுராந்தகம்: மொறப்பாக்கத்தில் வீரபாஞ்சாலி அம்மனுக்கும் விஜயனுக்கும் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.

மதுராந்தகத்தை அடுத்த மொறப்பாக்கம் கிராமத்தில் வீரபாஞ்சாலி திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, மஹா-பாரத திருவிழா, கடந்த மாதம் 28ம் தேதி கணபதி ஹோமம், கங்கை பூஜை, காப்பு கட்டுதல், அபிஷேக, ஆராதனையுடன் துவங்கியது.  விழா துவங்கியது முதல் 18 நாட்களுக்கு மாலையில் மஹாபாரத சொற்பொழிவும், கடந்த 1ம் தேதி முதல் 11 நாட்கள் இரவில், கரசானுார் செந்தில் குமரன் நாடக கலைக்குழுவினரின் மஹாபாரத இதிகாச நாடகங்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில், பிரதான நிகழ்வான, வீர பாஞ்சாலி என்று போற்றப்படும் திரவுபதி அம்மன் மற்றும் வில் விஜயன் என்று போற்றப்படும் அர்ச்சுனன் இடையேயான திருக்கல்யாணம் நடந்தது. இதில், வீர பாஞ்சாலி அம்மனுக்கும், வில் விஜயனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்து, ஹோமம் வளர்த்து, மாலை மாற்றி, பூஜை செய்து திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், மொறப்பாக்கம், கழனிப்பாக்கம் கிராமங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட பெண்கள், சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக வந்து, திருக்கல்யாணத்தில் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தார். கோயிலுக்குள் ... மேலும்
 
temple news
 வாடிப்பட்டி: பரவை அண்ணா நகரில் காளியம்மன் கோயில் வைகாசி உற்ஸவம் நடந்தது. சந்தன மாரியம்மன் பஜனை ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி முத்து மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா ... மேலும்
 
temple news
சோழர் பேரரசால் கலை நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள, சிவாலயங்களில், கேசம்பள்ளி அருகே உள்ள சுயம்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: மாகறல் கமலவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் புனரமைப்பு பணிகள் முடித்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar