Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் ...  ஏகாம்பரநாதர் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக 5 வீல் சேர்கள்  கொள்முதல் ஏகாம்பரநாதர் கோவிலில் பக்தர்களின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாகறல் வைகுண்டவாசர் கோவிலில் ஆகஸ்டில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாகறல் வைகுண்டவாசர் கோவிலில் ஆகஸ்டில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2026
08:06

காஞ்சிபுரம்: மாகறல் கமலவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் புனரமைப்பு பணிகள் முடித்து, ஆகஸ்ட் மாதத்தில் மஹா கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முடிவு செய்துள்ளனர். மாகறல் வைகுண்டவாச பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து, இக்கோவிலை முழுமையாகப் புதுப்பித்து, மஹா கும்பாபிஷேகம் நடத்த திட்ட மிடப்பட்டது. அதன்படி, மூலவர் பெருமாள் சன்னிதி, தாயார் சன்னிதி மற்றும் பரிவாரத் தெய்வங்களின் சன்னிதிகள் ஆகம விதிப்படி பழமை மாறாமல் சீரமைக்கப்பட உள்ளன.  கோவிலின் மஹா மண்டபம் மற்றும் பிரகார சுவர்கள் பலப்படுத்தப்பட்டு, புதிய வர்ணங்கள் தீட்டப்படவுள்ளன. கோவிலைச் சுற்றியுள்ள மதில் சுவர்கள் சீரமைக்கப்பட்டு, பக்தர்கள் வலம் வர ஏதுவாக பிரகாரம் சமன்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட திருப்பணிகள், 25.50 லட்சம் ரூபாய் மதிப்பில் உபயதாரர் நிதி பங்களிப்புடன் நடைபெற்று வருகின்றன. திருப்பணிகள் முடிவடைந்ததும், ஆகஸ்ட் மாதத்தில் மஹா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக கோயில்களில் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar