வைகாசி கடைசி வெள்ளி; சிங்காநல்லூரில் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2026 10:06
கோவை; வைகாசி மாதம் கடைசி வெள்ளிகிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் உள்ள பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது. இதில் விபூதி காப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.