Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி கடைசி வெள்ளி; ... நாசரத்பேட்டையில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி நாசரத்பேட்டையில் ஸ்ரீ விஜயேந்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலிலே பிரசாதம் தயாரித்து விற்பனை; 3 மாதத்தில் செயல்படுத்த அமைச்சர் உத்தரவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவிலிலே பிரசாதம் தயாரித்து விற்பனை; 3 மாதத்தில் செயல்படுத்த அமைச்சர் உத்தரவு

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2026
11:06

சென்னை: ‘பக்தர்கள் தங்குவதற்கான அறைகளை, எளிதாக முன்பதிவு செய்யும் வகையில், கோவில் இணையதளம் வடிவமைக்கப்பட வேண்டும்’ என, கோவில் செயல் அலுவலர்களுக்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.


அமைச்சர் தலைமையில் நடந்த ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வு கூட்டத்தில், அமைச்சர் வழங்கிய அறிவுரைகள்: ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏலம் தொடர்பாக, திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்ட பின், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருந்தால், அவற்றை சட்ட விதிகளுக்கு உட்பட்டு ரத்து செய்து, திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கியதும், அதன்படி செயல்பட வேண்டும் .


 ‘ஆன்லைன்’ தரிசன சீட்டு முன்பதிவு, பக்தர்கள் எளிதில் முன்பதிவு செய்யும் வகையில் இணையதள வசதி ஏற்படுத்த வேண்டும். தரிசன முன்பதிவிற்காகவே, தனியாக ஒரு இணையதள வசதி ஏற்படுத்த வேண்டும்


l ஒரே தளத்தின் கீழ், பக்தர்கள் பயனுறும் வகையில், அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும். உதாரணமாக மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை மற்றும் சிறப்பு தரிசன சீட்டு வழங்க வேண்டும்


l கோவில் நன்கொடையாளர்களுக்கும், உள்ளூர் மக்களின் வழிபாட்டிற்காகவும், சிறப்பு தரிசன சீட்டு அல்லது தனியாக தரிசன நேரம் ஒதுக்க வேண்டும்


l கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்


l இணை ஆணையர் நிலையில் உள்ள கோவில்களில், அடிப்படை வசதிகளுடன் கூடிய பக்தர்கள் தங்கும் விடுதி தொடர்பான, முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்


l தேர் திருவிழாவின் போது, தேர் சக்கரங்களுக்கு அருகில் பக்தர் கள் நெருங்காதவாறு, உரிய பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்ய வேண்டும்.


கோவில் சார்பில் கும்பாபிஷேகம், தேர், தெப்பம் போன்ற திருவிழாக்களின் போது, மூன்றாம் நபர்கள் காப்பீடு செய்யப்பட வேண்டும்


l கோவிலில் உள்ள பிரசாத கடைகள் தொடர்பாக, பல புகார்கள் வந்தபடி உள்ளன. இவற்றை தவிர்க்க, கோவில் வளாகத்திற்குள் பிரசாதங்கள் தயாரித்து, பக்தர்களுக்கு வழங்க உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அடுத்த மூன்று மாதங்களுக்குள், இதை செயல்படுத்த வேண்டும்


l கோவில் வளாகத்திற்குள் லட்டு, முறுக்கு போன்ற பிரசாதங்களின் அளவு, விலைப்பட்டியல், தயாரிப்பு தேதி, எத்தனை நாட்கள் பயன் படுத்தலாம் என்ற விபரங் களை கண்காணித்திட, கூடுதல் ஆணையர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். யாத்ரி நிவாஸ் மற்றும் பக்தர்கள் தங்குவதற்கான அறைகளை முன்பதிவு செய்யும் வகையில், கோவில் இணையதளம் வடிவமைக்கப்பட வேண்டும். கோவில்களில் உள்ள கழிப்பறைகள், தினசரி சுத்தம் செய்யப்பட வேண்டும். ஒரு கால பூஜை நடக்கும் கோவில்களை, மூன்று கால பூஜை நடக்கும் கோவில்களாக மாற்ற, அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் அறிவுரைகள் வழங்கி உள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar