கேதார்நாத் தாமில் இதுவரை 12.5 லட்சம் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2026 05:06
உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதுவரை 12.5 லட்சம் பக்தர்கள் வழிபாடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷால் மிஸ்ரா கூறியுள்ளார்.
ருத்ரபிரயாக் மாவட்ட ஆட்சியர் விஷால் மிஸ்ரா கூறுகையில், "இதுவரை சுமார் 12.5 லட்சம் பக்தர்கள் கேதார்நாத் தாமிற்கு வருகை தந்து வழிபாடு நடத்தியுள்ளனர். பருவமழை காலம் தொடங்கியுள்ளதாலும், நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதாலும், சமீப நாட்களாக யாத்ரீகர்களின் வருகையில் சற்று குறைவு காணப்படுகிறது. இத்தகைய சூழலில், யாத்ரீகர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். பருவமழை காலத்தில், எங்கள் கட்டுப்பாட்டு அறை மூலம் முழு யாத்திரைப் பாதையையும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். வானிலை ஆய்வு மையத்திடமிருந்து எச்சரிக்கை வரும்போதெல்லாம், அதன் அடிப்படையில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதோடு, எங்கள் குழுக்களையும் தயார் நிலையில் வைத்திருக்கிறோம்." இவ்வாறு தெரிவித்தார்.