ஆலூர் தேசி லிங்கேஸ்வரர் சுவாமி கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2026 07:06
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே சின்னமத்தம்பாளையம் ஆலூர் தேசி லிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வைகாசி மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. விழாவையொட்டி சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், ஆலூர் குல மக்கள் திரளானோர் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.