ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் அமைச்சர் சாமி தரிசனம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2026 07:06
பொள்ளாச்சி; ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா சுவாமி தரிசனம் செய்தார்.
பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா மாநிலத்திலிருந்தும் மக்கள் பலர் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், அமாவாசை தினமான நேற்று, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா கோவிலுக்கு வந்தார். இவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அமைச்சர் சுவாமி தரிசனம் செய்தார். அர்ச்சகர்கள் மாலை அணிவித்து அமைச்சருக்கு மரியாதை செலுத்தினர்.