பழநி முருகன் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2026 07:06
பழநி; பழநி முருகன் கோயிலில் விடுமுறை, வைகாசி அமாவாசை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் அதிக கூட்டம் இருந்தது.
பழநி முருகன் கோயிலுக்கு ஏராளமான வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் விடுமுறை தினத்தை முன்னிட்டு வருகை புரிந்தனர். கோயிலுக்கு செல்ல பக்தர்கள், வின்ச், ரோப் காரில் பல மணி நேரம் காத்திருந்தனர். கோயிலில் பொது, கட்டண தரிசன வரிசையில் 4 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். குடமுழுக்கு மண்டபம் மூலம் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். திரும்பி வரும் பக்தர்கள் படிப்பாதை மூலம் இறங்கி வர அனுமதிக்கப்பட்டனர்.வெளி பிரகாரத்தில் பிரசாதம், குழந்தைகளுக்கு பால் ஆகியவை வழங்கப்பட்டது.