Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் ...  செங்காட்டூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை  செங்காட்டூர் முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டத்து அரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் ராக்கியாபாளையத்தில் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பட்டத்து அரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் ராக்கியாபாளையத்தில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2026
05:06

திருப்பூர்; திருப்பூர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையத்தில் உள்ள ஸ்ரீபட்டத்து அரசி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடந்தது.

இக்கோவிலை, ராக்கியாபாளையம் மற்றும் கணபதிபாளையம் மக்கள் வழிபட்டு வருகின்றனர். கடந்த 14-ம் தேதி தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலத்துடன் கோவில் கும்பாபிேஷக விழா துவங்கியது. சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள், பன்னிரு திருமுறை பண்ணிசை முழங்க, கால பூஜைகள் நடந்தேறின. இன்று அதிகாலை 4:30 மணிக்கு, நான்காம் கால வேள்வி பூஜைகள் நிறைவடைந்ததும், யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது.

மங்கள இசை முழங்க, ஆன்மிகப் பெரியோர்கள் மற்றும் ஏராளமான பக்தர்களின் பக்தி முழக்கங்களுக்கு மத்தியில் காலை 6:00 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர விமான கலசங்களுக்கும், தொடர்ந்து மூலவர் பட்டத்தரசி அம்மன், வலம்புரி விநாயகர், பாலமுருகன், மாசி அய்யன், துர்க்கையம்மன், நவகிரஹம், துவாரசக்தி, கன்னிமார், கருப்பண்ண சாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. பக்தர்களுக்குப் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன. இன்று முதல் அடுத்த 48 நாட்களுக்குத் தொடர்ந்து மண்டல பூஜைகள் நடைபெற உள்ளன. பந்தநல்லுார் நாட்டியாலயா குழுவின் பரதநாட்டிய நிகழ்ச்சி மற்றும் பாரம்பரிய வள்ளிகும்மி ஆட்டம் நடைபெற்றன. நடுவர் ஞானசம்பந்தன் தலைமையில், ‘பக்தி நெறியை பெரிதும் வளர்ப்பவர்கள் ஆண்களா? பெண்களா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள், திருப்பணி கமிட்டியினர் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar