Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முனீஸ்வரம் இருளாயி அம்மன் கோயில் ...  1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு  1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
12ம் நுாற்றாண்டு தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் 22 ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேக பணிகள் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
12ம் நுாற்றாண்டு தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில்  22 ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேக பணிகள் துவக்கம்

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2026
04:06

தஞ்சாவூர், கி.பி.,12ம் நுாற்றாண்டில், இரண்டாம் ராஜராஜ சோழனால், கட்டப்பட்ட தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில், 22 ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்வதற்கான பாலாலயம் துவங்கியது. 

தஞ்சாவூர் மாவட்டம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில், கி.பி.12ம் நுாற்றாண்டில், இரண்டாம் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. இக்கோவிலில் கலைநுணுக்க வேலைபாடுகளுடன் கூடிய ஆயிரக்கணக்கான சிற்பங்கள் உள்ளன. யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற இக்கோவில், இந்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.  

இக்கோவிலில், கடந்த 2004ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிறகு கும்பாபிஷேகம் இன்றியும், பிராதன நுழைவு வாயில் சிதைந்து காணப்பட்டன. இந்நிலையில், பல்வேறு இந்து அமைப்புகள், தன்னார்வலர்கள், பக்தர்கள் கோரிக்கையை ஏற்று, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து திருப்பணியை துவங்கும் விதமாக, கடம்புறப்பாடு,  விமானபடத்திற்கு கலசாபிஷேகமும், யாகசாலை பூஜையுடன் விமான பாலாயம் நடந்தது. இதில் அய்யர்மலையை சேர்ந்த ராஜலிங்க சுவாமிகள்,  அரண்மனை தேவஸ்தான் செயல் அலுவலர் சுந்தரராஜன்,  அறநிலையத்துறை ஆய்வாளர் சுதா, சிவாச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் கலந்துக்கொண்டனர். 

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே நிருபர்களிடம் கூறியதாவது: கோவில் கும்பாபிஷேகத்தை வரும் தை மாதத்தில் செய்ய வேண்டும் என மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதற்குள்ளாக திருப்பணிகளை தொல்லியல்துறையுடன் இணைந்து முடிக்க திட்டமிட்டுள்ளோம்.  கோவிலை சுற்றி பாதுகாப்பு வசதிக்காக சி.சி.டி.வி., கேமராக்கள் அமைக்க வேண்டும். குடிநீர், மற்றும் கழிப்பிட வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். பார்க்கிங், காலணிகள் பாதுகாக்கும் இடம், கோவில் மடப்பள்ளி சீரமைப்பு போன்ற பணிகளை செய்ய வேண்டும் என தொல்லியல்துறையினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை : புரட்டாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று கோவை மதுக்கரை மலை மேல் ... மேலும்
 
temple news
கடலாடி: கடலாடி அருகே மலட்டாற்று பகுதியில் இயங்கி வரும் பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வு மைய ஆசிரமத்தில் ருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar