பதிவு செய்த நாள்
25
ஜன
2013
11:01
சேந்தமங்கலம்: கருங்கல்பாளையம் தண்டாயுதபாணி ஸ்வாமி கோவிலில், வரும், 27ம் தேதி, தைப்பூச நாளன்று மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. சேந்தமங்கலம் அருகே கருங்கல்பாளையத்தில், செல்வ விநாயகர், தண்டாயுதபாணி ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. அக்கோவில் மஹா கும்பாபிஷேகம், வரும், 27ம் தேதி தைப்பூசத்தில் நடக்க உள்ளது. அதை முன்னிட்டு, இன்று காலை, 8 மணிக்கு விநாயகர் பூஜை, மகாசங்கல்பம், கணபதி ஹோமம் ஆகியவை நடக்க உள்ளது. மாலை, 4.30 மணிக்கு கிராம எல்லையில் இருந்து மேள தாளம் முழங்க தீர்த்தம் எடுத்து வருதல் நடக்க உள்ளது. மறுநாள், 26ம் தேதி காலை, 9 மணிக்கு, விசேஷ சந்தி, விநாயகர் பூஜை, புண்யாகம் நடக்க உள்ளது. தொடர்ந்து, 27ம் தேதி தைப்பூச நாளன்று காலை, 8.15 மணிக்கு கோவில் கோபுர விமானம், விநாயகர், தண்டாயுதபாணி, நவகிர மூர்த்திகள், இடும்பன் ஆகிய ஸ்வாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.