பதிவு செய்த நாள்
25
ஜன
2013
11:01
துறையூர்: ஓங்கார குடிலில் உள்ள அகத்தியர் சன்மார்க்க சங்கத்தில், தைப்பூச பெருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், துறையூர் ஓங்கார குடிலில் உள்ள அகத்தியர் சன்மார்க்க சங்கத்தை, ரெங்கராஜ தேசிக சுவாமிகள் நிறுவினார். இங்கு இதுவரை நடந்த அன்னதானத்தில், இரண்டு கோடி மக்களுக்கு மேலாக பசியாறியுள்ளனர். தைப்பூச நாளிலும், பவுர்ணமி நாளிலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய ராமலிங்க சுவாமிகள் எழுதிய, அருட்பெருந்ஜோதி அகவல் பாராயணம் நடைபெறும். தைபூச நாளில் அருட்பெருந்ஜோதி தரிசனம் நடைபெறும். இத்தகைய சிறப்பு பெற்ற ஓங்கார குடிலில் தைப்பூசத்தன்று , காலை, 6 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி தரிசனம், ஞானிகளை பூஜித்து காலை, 7.30 மணி முதல், மதியம், மூன்று மணி வரை, அன்னதானம், காலை எட்டு மணிக்கு குருநாதர் தீட்சை வழங்குதல், 10 மணிக்கு சன்மார்க்க சங்க கொடியேற்றுதல், 10.30 மணிக்கு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் தலைமையில், ஞானியர்கள் சிறப்பு பூஜை மற்றும் அருளுரை, 12 மணிக்கு மகாநதி சோபனா இன்னிசை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க சன்மார்க்க சங்க கொள்கை பரப்பாளர் நடராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.