கடலுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூன் 2026 08:06
கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவில் ஆனி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் திருப்பாவை சாத்துமுறை, நித்தியகொடி பூஜை நடந்தது. தொடர்ந்து, கொடி யேற்றம் நடந்தது. திருமலை அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். சுவாமி வீதியுலா முடிந்து திருமஞ்சனம் நடந்தது. தினமும் காலை, மாலை வீதியுலா நடக்கிறது. நாளை 24ம் தேதி இரவு 7:00 மணிக்கு தங்க கருட சேவையில் பெருமாள் வீதியுலா, 27ம் தேதி காலை 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 29ம் தேதி காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 1ம் தேதி காலை 10:00 மணிக்கு 108 கலச திருமஞ்சனம், 2ம் தேதி காலை 10:00 மணிக்கு திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது.