Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குழந்தை முத்துக்குமார சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
எழுத்தின் அளவு:
குழந்தை முத்துக்குமார சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2026
01:06

சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள குழந்தை முத்துக்குமார சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள குழந்தை முத்துக்குமார சுவாமி கோவிலில் வீற்றிருக்கும் முருகனை, தங்களின் குழந்தையாக பாவித்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அறநிலைய துறை நிர்வகிக்கும், வடபழனி முருகன் கோவிலின் உபகோவிலாக விளங்கும். இதை சீரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.


இதையடுத்து, சிற்ப சாஸ்திர முறைப்படி, நுாதன கொடி மரம் நிறுவப்பட்டு, திருப்பணிகள் முடிக்கப்பட்டன. தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை யாகசாலை வளர்க்கப்பட்டு கணபதி, நவக்கிரஹ ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டன. கும்பாபிஷேக நாளான நேற்று, காலை 7:00 மணி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கின. காலை 10:00 மணிக்கு விமானத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. குழந்தை முத்துக்குமார சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களான விநாயகர், தட்சிணாமூர்த்தி, சிவலிங்கம், அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சன்னிதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. வடபழனி முருகன் கோவில் தலைமை சிவாச்சாரியார் செல்வம் தண்டபாணி தலைமையில், சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இவ்விழாவில், வட பழனி முருகன் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், துணை கமிஷனர் லட்சுமி மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர். அவர்களுக்கு, கும்ப நீர் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வேதபாராயணம், திருமுறை பாராயணம் செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதக குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில், வருடாந்திர சலகட்ல ஜேஷ்டாபிஷேகம் விழா நேற்று ஜூன் 26ல் ... மேலும்
 
temple news
கோவை; ஆனி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை உக்கடம் கோட்டைமேடு கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
கோவை; ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ஆர் எஸ் புரம் காமாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி மகா ... மேலும்
 
temple news
சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள், இன்று முதல் ஜூலை 9ம் தேதி வரை கர்நாடகா மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar