நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2026 05:06
நெல்லிக்குப்பம்: பூலோகநாதர் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.
நெல்லிக்குப்பத்தில் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் இன்று மாலை பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன் உட்பட 18 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் அருள்பாலித்தார். பூலோகநாதர் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். கைலாசநாதர், நடனபாதேஸ்வரர், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் எய்தனுார் ஆதிபுரீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.