Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் மாங்கனி திருவிழா; ...  கும்பாபிஷேகத்தை காணும் பக்தர்களுக்கு புண்ணியம் கிட்டும்; திருக்கோவிலுார் ஜீயர் கும்பாபிஷேகத்தை காணும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பவுர்ணமி விரதம்; சந்திரன், சிவ வழிபாடு செய்ய செல்வச் செழிப்பு ஏற்படும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பவுர்ணமி விரதம்; சந்திரன், சிவ வழிபாடு செய்ய செல்வச் செழிப்பு ஏற்படும்!

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2026
10:06

பவுர்ணமி விரதம் என்பது மிகவும் சக்திவாய்ந்த மற்றும் புனிதமான ஒரு வழிபாடாகும். பவுர்ணமியில் சந்திர பகவானையும், சிவபெருமானையும் வழிபடுவது வழக்கம்.  சந்திரன் வழிபாடு காலத்தை கடந்த பழமையானதாம். உள்ளம் ஆற்றலுடன் விளங்க சந்திரனின் அனுக்கிரகம் முக்கியம். பவுர்ணமி அன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பரிபூரணமாகப் பிரகாசிக்கும். பவுர்ணமியன்று சந்திரனின் அற்புத சக்தியை எளிதாய் அடையலாம். இன்று கிரிவலம் சென்று வழிபட மனஅழுத்தம் குறையும். நோய் நீங்கும்.


சிவபெருமானுக்கு சந்திரசேகர் என்று பெயர் உள்ளது. அதற்கு காரணமே அவர் தலையில் இருக்கும் பிறைதான். சந்திரன் என்றால் நிலா என்று பொருள் சேகர் என்பதற்கு உச்சம் என்பது பொருள். உச்சத்தில் நிலவை கொண்டவனே என்பதன் அர்ததம்தான் சந்திரசேகர் என்பதாகும். இதற்கு பிரம்மாவின் மகனான தக்ச பிரஜாபதி 27 நட்சத்திரங்களை தன் மகள்களாக கொண்டிருந்தார். அவரின் அனைத்து மகள்களும் சந்திரனுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டனர். திருமணத்தின் போது, அனைத்து பெண்களிடமும் சமமாக அன்பு செலுத்துவேன் என்று உறுதியளித்த சந்திரன், ரோகிணியிடம் மட்டுமே அதிக அன்பும், பாசமும் கொண்டிருந்தான். இதனால் மற்ற பெண்கள் அனைவரும் கலங்கி நின்றனர். இதுபற்றி அறிந்த தட்சன், கோபத்தில் சந்திரனின் அழகு தேய்ந்து போகட்டும் என்று சாபம் கொடுத்தான். பிரஜாபதியின் சாபத்தால் சந்திரன் கடலுக்குள் தஞ்சம் புகுந்தார். நிலவு இல்லாததால் இயற்கையின் சமநிலை சீர்குலைந்தது, இயற்கையை சார்ந்திருந்த அனைத்து உயிரினங்களும் இதனால் பாதிப்படைந்தனர். எனவே தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் இந்த பிரச்சினையில் இருந்து காப்பாற்றுமப்டி வேண்டினர். தன்னிடம் இருந்த பாதி ஒளியை வைத்துக்கொண்டு நிலா சிவபெருமானின் தலையில் தஞ்சமடைந்தார்.  சாபத்தின் பிடியில் சிக்கிய சந்திரனுக்கு சிவபெருமான் அடைக்கலம் கொடுத்தார். சிவபெருமான் தலையில் சந்திரனை சூட்டியதும், சந்திரனின் சாபம் நீங்கியது. அவர் தன் தலையில் சந்திரனை சூட்டியதும், சந்திரன் வளரத் தொடங்கினான். சிவபெருமான் நிலவை தலையில் அணிந்துகொண்ட பிறகு தன் சக்தி மூலம் அடுத்த 15 நாட்களுக்கு நிலவின் ஒளியை அதிகரித்தது. சிவசக்தியால் ஒளிரும் சந்திரனை கிரிவலம் வந்து வணங்க சிறப்புடன் வாழலாம். இன்று விட்டில் விளக்கேற்றி சிவ வழிபாடு செய்ய எதிர்மறை ஆற்றல் நீங்கி, நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar