நாகர்கோவில்: நாகரை மூலவராக கொண்டு தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்ட தலைநகர் நாகர்கோவிலில் அமைந்துள்ளது நாகராஜாகோவில். இந்த பெயரில் தான் நாகர்கோவில் ஊர் பெயரும் அமைந்துள்ளது. கோயில் பெரிதாக இருந்தாலும் நாகர் பிரதிஷ்டை இன்னும் ஓலைக்கூரையில்தான் அமைந்துள்ளது. இங்குள்ள புற்றில் இருந்து வரும் மண்தான் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இப்படி சிறப்பு பெற்ற நாகராஜா கோயிலில் தை திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பதாம் நாள் விழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.