நாகர்கோவில்: 500 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை வேளிமலை குமாரகோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தக்கலை அருகே வேளிமலையில் அமைந்துள்ளது குமாரகோயில். இந்த கோயில் திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் மலைமீது கட்டப்பட்டது. இந்நிலையில் தேவசம்போர்டு 50லட்சம் ரூபாய் கும்பாபிஷேகத்துக்காக ஒதுக்கியது. பக்தர்கள் நன்கொடையாக ஒரு கோடி ரூபாய் திரட்டப்பட்டது. மூன்று ஆண்டுகளாக திருப்பணி நடந்தது. மூலஸ்தான கோபுரத்தில் தங்க தகடு வேயப்பட்டு, கொடி மரத்தில் செம்பு தகடுகள் வேயப்பட்டது. @நற்று,கும்பாபிஷேகம் நடைபெற்றது.