முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வில்லிப்பாக்கத்தில் விமரிசை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2026 04:07
செய்யூர்; வில்லிப்பாக்கம் கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது.
சித்தாமூர் அடுத்த சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட வில்லிப்பாக்கம் கிராமத்தில் வெண்ணாங்குப்பட்டு–மதுராந்தகம் நெடுஞ்சாலை ஓரத்தில் முனீஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் நிர்வாகத்தினர் சில மாதங்களாக திருப்பணி மேற்கொண்டனர். 50 அடி உயர பிரம்மாண்ட முனீஸ்வரர் சிலை மற்றும் கோவில் பிரகாரம் கட்டி முடித்தனர். திருப்பணி முடிந்து கடந்த ஜூன் 29ம் தேதி விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. 30ம் தேதி யாக சாலை பூஜைகள் துவங்கப்பட்டு கணபதி பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை என விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேகம் இன்று காலை 10:45 மணிக்கு கோவில் கோபுரத்திற்கும், 11:05 மணிக்கு மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.