அம்மன் வழிபாட்டில் புற்று வழிபாட்டிற்கு சிறப்பிடம் உண்டு. பாம்பு புற்றை ‘புற்று மாரியம்மன்’ என வழிபடுவர். ஆடிசெவ்வாய், ஆடி வெள்ளி புற்று வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள். இந்நாட்களில் புற்றின் முன் பொங்கலிட்டும், பால் வைத்தும் வழிபடுவர். இதனால் நோய் நீங்கி உடல்நலம் பெருகும். இந்நாளில் நாகாத்தம்மன் என்ற பெயரில் பாம்பை வழிபடுவோரும் உண்டு.