திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு தர்கா நிர்வாகி வரவேற்பு!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2026 04:11
திருப்பரங்குன்றம்: தீப தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு தர்கா நிர்வாகி ஒருவர் வரவேற்பு அளித்துள்ளதை அகில பாரத அனுமன் சேனா பாராட்டியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வரவேற்கும் விதமாக அகில பாரத அனுமன் சேனா சார்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே உள்ள மயில் மண்டபத்தில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றி 108 தேங்காய்கள் உடைத்து வழிபாடு செய்தனர். மாவட்டத் தலைவர் சக்திவேல், நகர் தலைவர் வசந்தகுமார், மாவட்ட பொது செயலாளர் சித்தன், வழக்கறிஞர் சூரிய பிரகாஷ் கலந்து கொண்டனர்.
பின்பு அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராமலிங்கம் கூறியதாவது: கடந்த 50 ஆண்டு கால போராட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் மூலம் ஒரு தீர்வு கிடைத்துள்ளது. அந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக இன்று சன்னதி தெருவில் உள்ள மயில் மண்டபத்தில், அங்கு உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து, மயில் அருகில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. வழக்கமாக ஐயப்பனுக்குத்தான் மகரஜோதியை பார்ப்போம். இந்த ஆண்டு நவ. 24ல் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீப தூணில் முருகப்பெருமானின் மகரஜோதி பார்க்கப்போகிறோம். நவ. 24 மாலை 6:00 மணிக்கு அனைத்து முருக பக்தர்களும் தீபத்தூனின் தீப ஜோதியை தரிசிக்க கேட்டுக் கொள்கிறோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பு, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான முருக பக்தர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது. தமிழ் கடவுள் முருகப் பெருமானின் புகழ் உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளது.
முருக பக்தர்கள், ஹிந்துக்களின் நீண்டகால போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. ஒருநாள் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை சிக்கந்தர் தர்கா ஒண்ணாவது பங்காளி முகமது ரபீக் வரவேற்று வீடியோ வெளியிட்டுள்ளார். அவருக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அரசு தரப்பு மேல்முறையீடு சென்றால் ஆட்சிக்கு ஆபத்துதான். ஏற்கனவே தி.மு.க. இதை செய்துதான் ஆட்சியை இழந்தனர். த.வெ.க., அரசு அதை செய்யாது என்ன நம்புகிறோம். ஹிந்துக்களின் உணர்வைப் புரிந்து கொண்டு இந்த ஆண்டு த.வெ.க., அரசு தீப தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்றம் என நம்புறோம். உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றார்.