Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை தீபம் ஏற்றும் போது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்ய சாய் பாபா நூற்றாண்டு விழா: அகில இந்திய சேவாதள மாநாடு நிறைவு! தொண்டர்களுக்கு சிறப்பு விருது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சத்ய சாய் பாபா நூற்றாண்டு விழா: அகில இந்திய சேவாதள மாநாடு நிறைவு! தொண்டர்களுக்கு சிறப்பு விருது

பதிவு செய்த நாள்

22 நவ
2026
10:11

புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற இரண்டு நாள் அகில இந்திய சேவாதள மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி, புட்டபர்த்தி சாய் குல்வந்த் அரங்கில் நடைபெற்றது.


இதில் பேசிய தேசிய சேவை ஒருங்கிணைப்பாளர் கோடேஸ்வர ராவ், சுயநலமற்ற சேவையே ஆன்மிக விடுதலைக்கான பாதை என வலியுறுத்தினார். புட்டபர்த்தியில் சிறிய பஜனை மண்டலியாகத் தொடங்கிய சத்ய சாய் சேவா அமைப்பு, இன்று நாடு முழுவதும் 460 வருவாய் மாவட்டங்களில் 3,055 சேவா சமிதிகள், 4,022 பஜனை மண்டலிகள் மற்றும் சுமார் 3 லட்சம் சேவாதள தொண்டர்களுடன் வளர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். தொண்டர்கள் பகவானின் நற்பண்புகளைத் தங்கள் வாழ்வில் கடைப்பிடித்து, ஒன்பது அம்ச நன்னடத்தை விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


நிறைவு உரையாற்றிய அமைப்பின் அகில இந்திய தலைவர் நிமிஷ் பாண்டியா, லட்சக்கணக்கான சேவாதள தொண்டர்களும் சாய் ராமருக்குச் சேவை செய்யும் அனுமன்களைப் போன்றவர்கள் என்று குறிப்பிட்டார். அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய், எப்போதும் உதவி செய்; யாரையும் புண்படுத்தாதே என்ற பகவானின் கொள்கைகளை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.தொடர்ந்து, நாடு முழுவதும் சிறப்பாகச் சேவையாற்றிய தொண்டர்களுக்கு சிறப்பு விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மகளிர் பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆண்கள் பிரிவு பிரதிநிதிகளுக்கும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மாலையில் பிரபல பின்னணிப் பாடகர் கலாமாமணி மனோ மற்றும் இசைக்குழுவினர் வழங்கிய பக்தி வைபவம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. விநாயகர், சிவபெருமான், நடராஜர் மற்றும் சத்ய சாய் பாபாவின் பெருமைகளைப் போற்றும் பக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன. இறுதியாக, சுவர்ண ரதம் சாய் ரதம் என்ற பாடலுடன் இசை நிகழ்ச்சி நிறைவடைந்தது. அன்பு, அமைதி மற்றும் சேவையின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி அமைந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா 7ம் நாளான இன்று, ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஏகாதசி உற்சவம் வெகு விமர்சியாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, சக்கர தீர்த்த முக்கோடி உற்சவம் இன்று சனிக்கிழமை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலையில் நவ. 24ல் கார்த்திகை மகா தீபம் ஏற்ற பழைய தாமிர கொப்பரை ... மேலும்
 
temple news
திருமலை ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு உற்சவம் வெகு விமரிசையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar