நாகப்பட்டினம்: நாகையில் பிரசித்திப் பெற்ற பழமையான, சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை சொர்ணபுரீஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாகை அடுத்த பொரவாச்சேரியில், பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான பிரசித்திப் பெற்ற சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை சொர்ணபுரீஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி, கடந்த 20 ம் தேதி தேதி, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாஜனம், கனபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று கோ பூஜை,4 ம் காலம் பூஜைகள், கடம் புறப்பாடையடுத்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க , மூல மூர்த்திகள், உற்சவ மூர்த்திகள் விமானங்கள், ராஜகோபுரம், புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது.நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.