பதிவு செய்த நாள்
28
ஜன
2013
11:01
கொடுமுடி: கொடுமுடி புதுமாரியம்மன் கோவில், 75ம் ஆண்டு பூச்சூட்டு விழா, 29ம் தேதி துவங்குகிறது. 29ம் தேதி இரவு கம்பம் போடுதல், பூ மற்றும் பால் வழங்குதல் நடக்கிறது. 30 முதல் ஃபிப்ரவரி, ஏழாம் தேதி வரை காலை, 6 மணிக்கு காவிரியில் இருந்து யானை மீது தீர்த்தக்காவடி ஊர்வலமும், இரவு, எட்டு மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் நடக்கிறது. ஒன்றாம் தேதி தெற்கு தெரு மக்கள், ஓம்தி குரூப்ஸ் சார்பில் பால்குட தீர்த்தம் நடக்கிறது. இரண்டாம் தேதி அக்ரஹாரம், அண்ணா நகர் மக்களால் பால்குட தீர்த்தம் நடக்கிறது. மூன்றாம் தேதி காங்கேயம் ரோடு மக்கள் சார்பில் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடக்கிறது. நான்காம் தேதி மாலை கோலப்போட்டி, ஐந்தாம் தேதி மாலை, 60 அடி அக்னி குண்டம் இறங்குதல், ஆறாம் தேதி பகலில் பொங்கல் விழாவும், இரவில் மகா பூஜையும், ஏழாம் தேதி ஊர் பொதுமக்களால் மதியம் அன்னதானம், பால்குட தீர்த்தம் நடக்கிறது. மாலை கம்பம் காவி செல்லுதல் மற்றும் காவிரிக்கரையில் வாணவேடிக்கையும், எட்டாம் தேதி அன்னதானம், புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது.
ஏற்பாடுகளை செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் செய்து வருகிறார்.