குன்றத்தூர்: மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.குன்றத்தூர் ஒன்றியம், மாங்காடு பேரூராட்சியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் தைப்பூச தினத்தையொட்டி, மூன்று நாட்கள் தெப்பத் திருவிழா, கடந்த 25ம் தேதி மாலை துவங்கியது.வெள்ளீஸ்வரர், காமாட்சி அம்மன், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி, தெப்பத்தை வலம் வந்தனர். இரவு 8:30 மணிக்கு யானை வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.நேற்று முன்தினம், இரவு 7:00 மணிக்கு வைகுண்டப் பெருமாள், காமாட்சி அம்மன் தெப்பத்தில் எழுந்தருளினார். இரவு 8:30 மணிக்கு, கிளி வாகனத்தில் காமாட்சி அம்மன் வீதியுலா நடந்தது.நேற்று இரவு 7:00 மணிக்கு, அன்ன வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.