ஸ்ரீவில்லிபுத்துார் கோவிலில் மார்கழியின் பகல்பத்து திருநாளின் முதல்நாள், ஆண்டாள் தான் பிறந்த வம்சாவளியைச் சேர்ந்த வேதபிரான் பட்டர் வீட்டிற்கு செல்வாள். அப்போது அந்த வீட்டின் முன்பு காய்கறிகளை பரப்பி வைத்து ஆண்டாளுக்கு வரவேற்பு அளிப்பர். இதை ‘பச்சைப் பரத்தல்’ என்பர்.