ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள், 108 திவ்யதேசங்களில் அருளும் பெருமாள்களை மாலையாக அணிந்திருப்பதாக ஐதீகம். இதனை நினைவுபடுத்தும் விதமாக, ஆண்டாள் கோயில் கருவறையைச் சுற்றி பிரகார சுவர்களில் 108 திவ்யதேச பெருமாளின் உருவங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இதில் திருப்பாற்கடல், வைகுண்டம் பெருமாள் உள்ளிட்ட அனைத்து பெருமாள்களையும் தரிசிக்கலாம்.