* மலர்ந்த முகத்துடன் வரவேற்பதும் தர்மத்தைச் சேரும். * குடும்பத்தினர், உறவினர் மட்டுமின்றி அனைவரிடமும் அன்பு செலுத்து. * எழுந்து சென்ற ஒருவர் மீண்டும் வந்தால், அவர் இருந்த இடத்தை விட்டுக் கொடு. * சேவலுக்கு தீங்கு செய்யாதே. அதிகாலையில் அது நம்மை கூவி எழுப்புகிறது. * பாவி என யாரையும் இழிவாக நினைக்காதே. * தவறான விஷயத்தில் ஈடுபட்டால் வாழ்வே வீணாகும். * எளியவரை துன்புறுத்துபவன் சுவனத்திற்குள் நுழைய முடியாது.