Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » பூண்டி மகான்
பூண்டி மகான்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஜன
2013
03:01

எப்போதும் கையில் ஓர் அழுக்குத் துணி மூட்டை உடலையே சட்டை பண்ணாத அவர் அணிந்திருந்ததோ சட்டைக்குமேல் பற்பல சட்டைகள். இப்படி ஒரு மகான் வாழ்ந்தார். அருளுருவில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கும். அவர்தான் பூண்டி மகான் என்றும், ஆற்று சுவாமிகள் என்றும் அடியவர்களால் பக்தியோடு அழைக்கப்படும் சித்த புருஷர். இன்றும் அவரை வழிபடுபவர்களுக்கு வற்றாத அருள்புரிந்து காத்துக் கொண்டிருக்கிறார் அந்த மாபெரும் மெய்ஞ்ஞானி. அந்த மகாஞானி ஸித்தி அடைந்துவிட்டாரா இல்லையா? ஸித்தி அடைந்துவிட்டதாகத்தான் சொல்கிறார்கள். ஆனால் தன் அடியவர்கள் சிலருக்கு இன்றும் நேரில் அவர் காட்சி தருவதாகவும் சொல்கிறார்கள் என்றும் வாழும் சித்தர்கள் எப்படி ஸித்தி அடைய முடியும்? அவரின் வாழ்க்கைச் சரித்திரம் அவர் நிகழ்த்திய அற்புதங்களின் மொத்தத் தொகுப்பாக இருக்கிறது. அவர் நிகழ்த்திய அற்புதங்கள் நம்பக் கஷ்டமானவை. ஆனால் அடியவர்கள் அவர் மேல் கொண்ட நம்பிக்கை காரணமாக அந்த அற்புதங்கள் உண்மையிலேயே நிகழ்த்தப்பட்டவை. நம்பக் கஷ்டமானவற்றைக் கூட நிகழ்த்திக் காட்டுவதுதானே சித்தர்களின் தவ ஆற்றலின் மகிமை?

பூண்டி மகான் எந்த ஊரைச் சார்ந்தவர்? அவர் எவ்விதம் துறவியானார்? இதுபோன்ற வினாக்களுக்கு இன்றுவரை விடையில்லை. அவர் எங்கிருந்தோ ஒருநாள் பூண்டிக்கு வந்தார். அது பூண்டி செய்த பாக்கியம். பின்னர் அவர் அங்கேயே தங்கினிட்டார். அதனாலேயே அவர் பூண்டி மகான் என்று அடியவர்களால் அன்போடு அழைக்கப்படலானார். அவருக்கு மக்கள் இன்னொரு திருநாமத்தையும் சூட்டினார்கள்- ஆற்று சுவாமிகள் என்று! பூண்டி கலசப்பாக்கம் ஆற்றங்கரையில் எந்நேரமும் யோகத்தில் ஆழ்ந்திருந்ததால் அவரை ஆற்று சுவாமிகள் என்றழைக்கும் வழக்கம் தோன்றியது. ஆனால் யோசித்துப் பார்த்தால் இந்தப் பெயருக்கு நாம் இன்னொரு பொருளையும் காணமுடியும். தன் ஆன்மிகத் தவ ஆற்றலால் மக்களை நன்னெறிப்படுத்தி ஆற்றுப்படுத்தியவர் அவர். ஆற்றுப்படுத்துபவரை ஆற்று சுவாமிகள் என்றழைப்பது பொருத்தம் தானே? அவரை முதலில் பார்த்தவர்கள் ஏதோ பைத்தியகாரர் போலிருக்கிறது என்றுதான் நினைத்தார்கள். அவருக்கு நிரந்தரமாக ஒரு பைத்தியம் பிடித்திருந்தது என்பதும் உண்மைதான். அதுதான் கடவுள் பித்து. ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றி சாரதா தேவியிடமும் ஸ்ரீஅரவிந்தரைப் பற்றி அவரது மனைவி மிருணாளினியிடமும் ஒரு பைத்தியத்திற்கல்லவா உங்களைக் கட்டி வைத்து விட்டார்கள்? என்றுதானே உறவினர்கள் சொன்னார்கள்? இறைநிலையில் தோய்ந்த மகான்களைப் பைத்தியக்காரர்கள் என்று சொல்லும் உலகியல் மரபிலிருந்து பூண்டி மகான் மட்டும் எப்படித் தப்பிக்க முடியும்?

அவரைத் தொடக்கத்தில் பைத்தியம் என்று நினைத்தவர்கள் மெல்ல மெல்ல அவர் பைத்தியமில்லை. மாபெரும் மகான் என்று உணரத் தலைப்பட்டார்கள். தங்கள் வாழ்வில் நேரும் துயரங்களுக்கெல்லாம் அவரையே சரண் புகுந்தார்கள். ஆற்றங்கரையில் தவம் செய்த அவரது அருள் சக்தி மக்களை நோக்கி ஆற்று வெள்ளமாகப் பாய்ந்தது. முன்வினை காரணமாக மனிதர்களுக்கு நேர்ந்த எல்லா உலகியல் துன்பங்களையும் தம் அருளாற்றலால் நீக்கி மக்களுக்கு நல்வாழ்வை அருளினார் அவர். பின்னாளில் அவரது மகிமை உணர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக அவரைப் போய் வணங்குவதும் வழக்கமாயிற்று. ஆனால் இயன்றவரை எப்போதும் கூட்டத்திலிருந்து தனிப்பட்டே அவர் வாழ்ந்தார். அந்த சித்த புருஷரை பூண்டியில் முதலில் பார்த்தவர்கள் சில விவசாயிகள்தான். ரமணரை சேஷாத்ரி பரப்பிரும்மம் இனங் கண்டு உலகிற்கு அறிவிக்கவில்லையா? அது போலான பெரும் பெருமை அந்த விவசாயிகளுக்குக் கிட்டியது. ஆன்மிக உலகம் ஊர் பெயர் தெரியாத அந்த விவசாயிகளை என்றும் நன்றியோடு நினைக்க வேண்டியது அவசியம்.

கையில் ஏரும் கலப்பையுமாக வந்து கொண்டிருந்த அவர்கள், நாகதாளி முட்புதரில் உள்ளே சிக்கியவாறு அமர்ந்து மோனத்தவத்தில் ஆழ்ந்திருந்த அவரை தரிசித்தார்கள். யார் இவர்? முட்புதரின் அடர்த்திக்குள் இவர் எப்படிப் போய் உட்கார்ந்தார்? இவர் உட்கார்ந்த பின்னர் முட்புதர் வளர்ந்து இவரை முடியதா? அல்லது முட்புதருக்குள் ஒரு செடிபோல இந்த விந்தையான மனிதச் செடி தானாகவே முளைத்ததா? அவர்கள் மிகுந்த கவனத்தோடு முட்புதரை வெட்டி சுவாமியை எடுத்து வெளியே வைத்தார்கள். மூச்சு வந்துகொண்டிருந்ததால் அது மனித உருவம்தான் என்று புரிந்தது. இல்லாவிட்டால் ஒரு சிலை என்றுதான் கருதியிருப்பார்கள். அசைவே இல்லை முகத்தைப் பார்த்தால் குழந்தைபோல் இருந்தது. அவரைப் பார்க்கப் பார்க்க அவர்மேல் அளவற்ற பிரியம் எழுந்தது. கோவிலில் இருக்கும் சிலைக்கும் இந்த மனித உருவத்திற்கும் அதிக வித்தியாசத்தை அவர்களால் காண இயவில்லை. அவர்கள் பக்தியோடு அவரையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார்கள். திடீரென எழுந்தார் பூண்டி மகான் சரசரவென்று கம்பீரமாக நடக்கத் தொடங்கினார்! அது நடையல்ல; ஓட்டம் விவசாயிகள் அவரைத் துரத்திக் கொண்டு ஓடினார்கள்!

கொஞ்சம் கஞ்சி சாப்பிடுங்கள், கொஞ்சம் கூழ் சாப்பிடுங்கள்! என்று வேண்டினார்கள். அவர் அந்த எளிய உழவர்களின் அன்பான உபசாரம் எதையும் மறுக்கவில்லை கொடுத்ததை வாங்கிக் குடித்தார். எதுவும் வேண்டுமென்றும் அவர் கேட்கவில்லை. ஆற்று மணலின் இன்னொரு இடத்தில் அமர்ந்து நிஷ்டையில் ஆழ்ந்தார். அவ்வளவு தான் மறுபடி அசைவே இல்லாத சிலையாகிவிட்டார்! பசி என்றோ தாகம் என்றோ அவர் என்றும் எதுவும் சொன்னதில்லை எங்கோ சூனியத்தை வெறித்த ஒரு நிலைகுத்திய பார்வை. சுற்றுப்புறச் சூழலை முற்றிலும் மறந்த ஒரு மோன நிலை. ஆற்றங்கரையை விட்டால், காக்கங்கரை விநாயகர் கோவில் வாயில் படியில்தான் அவர் பெரும்பாலும் அமர்ந்திருப்பார். சந்தைக்கு வரும் மக்கள் கூட்டத்தைப் பராக்குப் பார்த்துக் கொண்டிருப்பார் எங்கோ வெறித்த பார்வை. சிலர் அவருக்கு டீ வாங்கிக் கொடுப்பார்கள். அதைச் சாப்பிடுவார்.

யாரும் எதுவும் கொடுக்கவில்லையா? வேண்டும் என்று எதையும் கேட்க மாட்டார். நேரே ஆற்றங்கரைக்குப் போவார். கைப்பிடியளவு மணலை எடுப்பார். அதைப் சாப்பிட்டு ஆற்றுத் தண்ணீரை அள்ளிக் குடிப்பார்! அவர் சாப்பிட்ட மணல் அவரளவில் எந்தக் கெடுதலும் செய்யாமல் ஜீரணம் ஆயிற்று என்பதுதான் விசேஷம்! மண்ணுக்குள் உடல் போகப்போகிறது. இப்போது உடலுக்குள் மண் போகட்டும் என்று நினைத்தாரோ என்னவோ! அவர் மணலைச் சாப்பிடும் வைபவத்தை ஒருநாள் ஓர் அன்பர் பார்த்து விட்டார். பார்த்தவர் திகைப்பில் ஆழ்ந்தார். ஆனால் ஆற்று சுவாமிகளோ, மேலும் ஒரு கைப்பிடி மணலை எடுத்து, நீயும் சாப்பிடுகிறாயா என்று சைகையால் வினவியபோது அன்பருக்கு அடிவயிறு கலங்கியது! ஆற்று சுவாமிகள் ஏதோ பலகாரம் சாப்பிடுவதுபோல் மணலை சாப்பிடுகிறார் என்ற செய்தி ஊர் முழுவதும் பரவியது. மக்கள் திகைப்படைந்தார்கள். ஜாதி மத வேறுபாடுகளை ஒருநாளும் அவர் பார்த்ததில்லை. நிறைய முஸ்லிம்கள் வெகு பிரியமாக அவருக்குக் கூழ் கொடுப்பார்கள். அவர் ஆனந்தமாக அந்தக் கூழை அருந்தி மகிழ்வார்.

கலசப்பாக்கம் பாலகிருஷ்ண முதலியாருக்கு அவர்மேல் பிரியம் அதிகம். அவர் ஒரு சோடாக்கடை வைத்திருந்தார். அந்த சோடாக் கடைப்பக்கமாக வந்து சுவாமிகள் அவ்வப்போது அமர்வதுண்டு. சுவாமிகளுக்கு சோடாவோ கலரோ கொடுப்பார் அவர். சுவாமிகள் அதை வாங்கிக் குடித்துவிட்டுப் போய்விடுவார். சில நேரங்களில் அவர் செய்யும் சித்துகள் வியப்பைத் தரும், நல்ல உச்சி வெய்யிலில், நடந்தால் கால் பொரியும் ஆற்றங்கரை மணலில் ஏதோ பஞ்சு மெத்தையில் படுத்திருப்பது போல் சுகமாகப் படுத்துக் கொண்டிருப்பார். அப்படியே நிஷ்டையிலும் ஆழ்ந்து விடுவார். அந்தப் பக்கமாக வரும் பள்ளி மாணவர்கள் அவர் உடலை அசைத்துப் பார்ப்பார்கள். தேக்குக் கட்டைப்போல் உறுதியான உடல் அவருக்கு. அதில் எந்த அசைவும் இருக்காது. எறும்பும் பூச்சிகள் சிலவுர் அவர் உடலில் ஊர்ந்துகொண்டிருக்கும். மாணவர்கள் அந்த எறும்பையும் பூச்சிகளையும் ஊதி அகற்றி விட்டு, அவரது பாதத்தைத் தொட்டுக் கும்பிட்டு விட்டுச் செல்வார்கள். சுவாமிகளுக்கு எறும்பு ஊர்ந்ததும் தெரியாது; சிறுவர்கள் தன் பாதங்களைத் தொட்டு கும்பிட்டதும் தெரியாது.

அப்படியே படுத்திருப்பவர் இரவெல்லாம் அங்கேயேதான் கிடப்பார். வெய்யில் மாறி மழை கொட்டு கொட்டென்று கொட்டும். அந்த மழைநீரில் அவர் உடல் கட்டைப்போல் அப்படியேதான் கிடக்கும். இப்படி அந்த வைபவம் பல நாட்கள் நீடிக்கும். பின்னர் பழையபடி எழுந்து கடைகளுக்கு வரத் தொடங்குவார். பூண்டி மக்களெல்லாம் அவரை தெய்வமென்றே கருதினார்கள். சிறுவர்களுக்குத் தேர்வு வந்துவிட்டால் போதும். பூண்டி சுவாமிகளை மாணவர்கள் ஏராளமான பேர் சூழ்ந்து கொள்வார்கள் சாமி! நான் பரீட்டையில் தேறுவேனா? என்று ஆர்வத்தோடு கேட்பார்கள். சிலர் கேள்விக்குத் தலையாட்டுவார் சுவாமிகள் வேறு சிலர் கேள்விக்குப் பேசாமல் இருந்து விடுவார்.  சில சிறுவர்கள் வரும்போது அவர்களை அவர் அழைக்கும் விதமே அலாதி ஒரு சிறுவனை அடேய் ஜட்ஜ்! இங்கே வாடா! என்று அழைப்பார். அந்தச் சிறுவன் பிற்காலத்தில் ஜட்ஜ் ஆனான் என்பதுதான் விசேஷம் இப்படி மற்றவர்களின் எதிர்காலத்தை முன்னரே அவர் கணித்துச் சொன்ன சம்பவங்கள் அவர் வாழ்வில் அதிகம்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar