நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2026 05:07
நெல்லிக்குப்பம்: பூலோகநாதர் கோவிலில், கிருத்திகையை முன்னிட்டு, சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம், பூலோகநாதர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு, சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு யாகம் நடத்தி, 108 சங்காபிஷேகம் நடந்தது. மூலவர் சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அய்யப்பன், வீரபத்திர சுவாமி, வர சித்தி விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.