கொரசின்னம்பட்டி காளியம்மன், பகவதியம்மன் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2026 10:07
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே கொரசின்னம்பட்டி முத்தாலம்மன், காளியம்மன், பகவதியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி ஜூலை.7 கிராம தெய்வங்களுக்கு வானவேடிக்கையுடன் கனிவைத்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து இரவு 2:00 மணிக்கு பகவதி அம்மன் தங்க தேரில் பவனி வருதல், ஜூலை.8 கோவிலில் மாவிளக்கு, முளைப்பாரி, தீச்சட்டி எடுத்தல் மற்றும் பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். தொடர்ந்து இரவு 2:00 மணிக்கு வான வேடிக்கையுடன் காளியம்மன் பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை காளியம்மனுக்கு மாவிளக்கு, முளைப்பாரி, தீச்சட்டி எடுத்தல் மற்றும் பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை அம்மன் மஞ்சள் நீராட்டுதலுடன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது.