Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளைவயல் காளி கோயில் ... கீழவளவு பஞ்சபாண்டவர் மலையில் காயகல்ப பயிற்சி கீழவளவு பஞ்சபாண்டவர் மலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை புதூர் வேணுகோபால பெருமாள் கோவிலில் திருத்தேரில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
கோவை புதூர் வேணுகோபால பெருமாள் கோவிலில் திருத்தேரில் சுவாமி உலா

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2026
11:07

கோவை; கோவை புதூர் வேணுகோபால பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவில் இன்று திருத்தேரில் உலா வந்து சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


கோவை புதூர் ஸ்ரீ வேணுகோபால பெருமாள் கோவிலில் 14ம் ஆண்டு பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் கடந்த 08ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் நிகழ்வாக புதன்கிழமை கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக சூரிய பிரபை சந்திர பிரபை சிம்ம வாகனம் ஆகியவற்றில் திருவீதியுலா வந்தார். இரண்டாம் நாள் வியாழக்கிழமை சேஷ வாகனம் கருட வாகனம் அம்சவாகனம் ஆகியவற்றில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மூன்றாம் நாள் வெள்ளிகிழமை அனுமந்த வாகனம் அதனை தொடர்ந்து திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது அடுத்த நிகழ்வாக யானை வாகனம் இரவு கண்ணாடி அறை சேவை ஆகியன நடைபெற்றன. நான்காம் நாள் நிகழ்வாக இன்று திருத்தேரில் உற்சவர் கோவை புதூர் பகுதிகளில் திருவீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர் நிகழ்வாக மாலை 4 மணிக்கு தொட்டி திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து குதிரை வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா வருவார். நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தீர்த்தவாரி வ நடைபெறுகிறது. தொடர்ந்து புஷ்ப யாகம்  மாலை  6 மணிக்கு புஷ்ப பல்லாக்கில் பெருமாள் எழுந்தருள்வார் இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கோவில் நிர்வாகித்தினர் தெரிவித்தனர். ஐந்து நாட்கள் பிரம்மோற்சவம் நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடமதுரை: வடமதுரை பகவதியம்மன், பக்த ஆஞ்சநேயர் கோயில்களில் கடந்தாண்டு நடந்த நிலையில் நேற்று வருடாபிஷேக ... மேலும்
 
temple news
மதுரை ; ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் ஆனி மாத பிரம்மோற்சவ திருத்தேர் உலா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிவகங்கை: சிவகங்கை பிள்ளை வயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதுமான இலவச ஓய்வு கூடம் இல்லாததால், கோயில் ரத ... மேலும்
 
temple news
திருவாடானை: தங்கம் விலை உயர்ந்தாலும் கோயிலுக்கு செலுத்தும் நேர்த்திக்கடன் குறையவில்லை.தங்கம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar