Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 19ம் நுாற்றாண்டு கோயில் ... எம்.புதுப்பட்டி: 48ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழா எம்.புதுப்பட்டி: 48ம் நாள் மண்டல பூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை முதல் ஆரத்தி விவகாரம் தேவஸ்தான உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்து
எழுத்தின் அளவு:
 திருமலை முதல் ஆரத்தி விவகாரம் தேவஸ்தான உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்து

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2026
11:07

பெங்களூரு: திருமலை வெங்கடேஸ்வரருக்கு முதல் ஆரத்தி காண்பிப்பது குறித்த முதல்வர் சிவகுமாரின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும், திருப்பதி திருமலை தேவஸ்தான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பதி திருமலையில் வெங்கடேஸ்வரருக்கு காண்பிக்கப்படும் முதல் ஆரத்தி மைசூரு அரச குடும்பத்திற்கு ஒதுக்கப்படுகிறது. இதில், ‘கர்நாடகாவை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், நீதிபதிகள் பங்கேற்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற உள்ளேன்’ என, முதல்வர் சிவகுமார் சமீபத்தில் அறிவித்தார். இதற்கு, திருப்பதி திருமலை தேவஸ்தானம் உறுப்பினர் பானு பிரகாஷ் எதிர்ப்பு தெரிவித்தார். ‘திருப்பதி கோவில் ஆந்திர அரசு, திருப்பதி திருமலை தேவஸ்தான உறுப்பினர்கள் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் விதிகளை மாற்றியமைக்கவோ அல்லது புதிய சட்டம் இயற்றவோ கர்நாடக அரசால் முடியாது’ என்றார். இந்நிலையில், திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் மற்றொரு உறுப்பினரான எஸ்.நரேஷ்குமார், ஆரத்தி விஷயத்தில் முதல்வர் சிவகுமாரின் கருத்தை வரவேற்று உள்ளார்.


இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருமலை முதல் ஆரத்தி விஷயத்தில் முதல்வர் சிவகுமாரின் கருத்து வரவேற்புக்குரியது. முதல் ஆரத்தியில் கர்நாடகாவை சேர்ந்த அரசியல்வாதிகள் மட்டுமின்றி முக்கிய பிரமுகர்களும் பங்கேற்க வேண்டும். திருப்பதி திருமலை தேவஸ்தான உறுப்பினர் பானு பிரகாஷ் முதல்வரின் அறிக்கையை முழுதாக புரிந்து கொள்ளாமல் எதிர்த்து வருகிறார். இவ்விவகாரத்தில் கோவிலின் பாரம்பரியம், வரலாற்று பின்னணி, தற்போதைய விதிமுறைகளை ஆராய்ந்து திருப்பதி திருமலை தேவஸ்தான உறுப்பினர்கள் வாரியம் சிவகுமாரின் கருத்துக்கு சாதகமான முடிவை எடுக்கும். மத ரீதியான நடைமுறைகளில் தொடர்ந்து ஆர்வம் காட்டும் முதல்வருக்கு நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லி: ரத யாத்திரை ஆன்மிக கலாசாரப் பாரம்பரியத்தின் தனித்துவமாகும்.  இறைவன் ஜெகந்நாதரின் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடி மாத பிரம்மோற்ஸவம் ஜூலை 20 முதல் 31 வரை விமரிசையாக நடக்க ... மேலும்
 
temple news
 திருவாடானை: திருவாடானை அருகே ஆக்களூர் கிராமத்தில் உள்ள சிவன் கோயில் குளத்தில் தண்ணீர் இறைத்தால் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்: அத்திக்கோம்பை பட்டாளம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தியும், ... மேலும்
 
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில், மாதப்பூச தினத்தில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.வடலூரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar