சிவகாசி பெரியசாமி, முத்தக்காள் 21 பரிவார கோவிலில் மண்டல பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2026 10:07
சிவகாசி: சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி ஸ்ரீ பெரியசாமி, ஸ்ரீ முத்தக்காள், ஸ்ரீ ராமக்காள் மற்றும் 21 பரிவார தெய்வங்களின் 48 ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. 21 கலசம் வைத்து ஓமம் வளர்த்து 21 தெய்வங்களுக்கும் அபிஷேகம், சிறப்பு ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்தனர்.