கலியுகத்தின் தொடக்கத்தில் தான் நாம் இருக்கிறோம். இன்னும் உலகில் தர்மம் அழிந்துவிடவில்லை. நல்லவர்கள் நாலுபேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் வழியில் நாமும் சேர்ந்து கொண்டு ஜென்மம் கடைத்தேறுவதற்கான (பிறவியில் இருந்து விடுபடுதல்) வழியைத்தேடுவது தான் நல்லது.