Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி முதல் வெள்ளி; கோவை அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி மாதம் முழுவதும் நடை அடைக்கப்படும் உமைய நாயகி அம்மன் கோயில்
எழுத்தின் அளவு:
ஆடி மாதம் முழுவதும் நடை அடைக்கப்படும் உமைய நாயகி அம்மன் கோயில்

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2026
05:07

சாயல்குடி: சாயல்குடி அருகே உள்ள எஸ். தரைக்குடியில் உள்ள பழமை வாய்ந்த உமையநாயகி அம்மன் கோயில் ஆடி மாதம் முழுவதும் கோயில் நடை அடைக்கப்படுகிறது.


எஸ்.தரைக்குடி அம்மன் கோயிலில் மூலவர் உமையநாயகி அம்மன் கூரையின்றி வெயிலிலும், மழையிலும் திருமேனிபடும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். நேற்று மாலை மூலவர் அம்மனுக்கு 16 வகையான அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் இரவு கோயில் கதவுகள் அடைக்கப்பட்டது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி முழுவதும் மூலஸ்தானம் மற்றும் பிரகார மண்டபம் அடைக்கப்படுவது வழக்கம். ஆவணி முதல் நாளன்று நடக்கும் அம்மனின் முதல் பார்வை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். கோயில் நிர்வாகிகள் கூறியதாவது: பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்நிகழ்வு கோயிலில் நிகழ்த்தப்படுகிறது. ஆடி என்றாலே அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், கூழ் காய்ச்சி ஊற்றுதல், முளைப்பாரி திருவிழா உள்ளிட்ட விசேஷங்கள் நடக்கும். ஆனால் அதற்கு விதிவிலக்காக இங்குள்ள மூலவருக்கு நடை சாத்தப்படுகிறது. இங்கிருந்து ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடுவதற்காக அம்மன் செல்வதாக ஐதீகம் (சம்பிரதாயம்) உள்ளது என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோவிலில் பராபவ ஆண்டு ஆடி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தக்ஷிணாயன புண்ணிய கால ஆனி பிரம்மோற்சவ நிறைவு நாளான இன்று ... மேலும்
 
temple news
பாலக்காடு: திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் 55 யானைகளுக்கு உணவளிக்கும் யானையூட்டு திருவிழா விமரிசையாக ... மேலும்
 
temple news
திருப்புவனம்: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு,  அனைத்து பகுதி அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar