Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோவிலில் ஆடி மாத ... சூலம் ரூபத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி; ஆனி பிரம்மோற்சவம் நிறைவு சூலம் ரூபத்தில் அண்ணாமலையாருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் யானையூட்டு விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் யானையூட்டு விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2026
04:07

பாலக்காடு: திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் 55 யானைகளுக்கு உணவளிக்கும் யானையூட்டு திருவிழா விமரிசையாக நடந்தது.


கேரள மாநிலம், திருச்சூர் வடக்கு நாதர் கோவிலில் ஆடி மாதம், யானைகளுக்கு யானையூட்டு (உணவு வழங்குதல்) திருவிழா, சிறப்பாக நடத்தப்படும். நடப்பாண்டுக்கான விழா இன்று நடந்தது. தந்திரி புலியன்னூர் சங்கரன் நம்பூதிரியின் தலைமையில் கணபதி ஹோமம் நடந்தது. 12 ஆயிரம் தேங்காய்கள், 2500 கிலோ வெல்லம், 1500 கிலோ அவல், 250 கிலோ மலர்கள், 150 கிலோ எள், எலுமிச்சை, கரும்பு, 500 கிலோ நெய், 100 கிலோ தேன் பயன்படுத்தப்பட்டன. காலை 7 மணி அளவில் கோவில் தெற்கு கோபுர நடை முன் வரிசையாக அணிவகுத்த பிரபல யானைகளான எர்ணாகுளம் சிவகுமார், பாரமேக்காவு காளிதாசன், பாம்பாடி சுந்தர், புதுப்பள்ளி சாது, புதுப்பள்ளி கேசவன், வினய சுந்தர் உட்பட 53 யானைகளுக்கு கஜ பூஜை நடந்தது. 9.45 மணி அளவில் பத்து வகை பழங்களுடன் 500 கிலோ புழுங்கல் அரிசியில் மூலிகைகள், வெல்லம், மஞ்சள் தூள், நெய், கரும்பு ஆகியவை கலந்த யானையூட்டு நிகழ்ச்சி நடந்தன. திருவம்பாடி லட்சுமி என்ற யானைக்கு உணவு வழங்கி கோவில் மேல்சாந்தி பய்யப்பள்ளி மாதவன் நம்பூதிரி துவக்கி வைத்தார். ஆடி மாதம் முதல் நாளில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar