Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் ... ஆடி வெள்ளி; திருப்பூர் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு ஆடி வெள்ளி; திருப்பூர் அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி முருகன் கோவிலில் பேட்டரி கார் சேவை துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடபழனி முருகன் கோவிலில் பேட்டரி கார் சேவை துவக்கம்

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2026
11:07

சென்னை; வடபழனி முருகன் கோவிலுக்கு வரும் மூத்தகுடி பக்தர்கள், மாற்று திறனாளிகள், கர்ப்பிணி பெண்களின் வசதிக்காக நன்கொடையாளரால் வழங்கப்பட்ட பேட்டரி கார் சேவையை அமைச்சர் ஆனந்த் நேற்று துவக்கி வைத்தார்.


சென்னை நகரில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று வடபழனி முருகன் கோவில். இக்கோவிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்களும், செவ்வாய், வார விடுமுறை விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர்.  பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மூத்த குடி பக்தர்கள் வசதிக்காக பேட்டரி கார் சேவை நேற்று துவங்கியது.  ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேட்டரி கார் சேவையை நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை மண்டல இணைக் கமிஷனர் மோகனசுந்தரம், கோவில் துணைக் கமிஷனர் லட்சுமி, அரசு கொறடாவும், விருகம்பாக்கம் எ.எல்.ஏ.,வுமா சபரிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


ஆறு இருக்கைகள் கொண்ட இந்த இலவச பேட்டரி கார் சேவை ஆண்டவர் சாலை நுழைவாயிலில் இருந்து கோவில் நுழைவாயில் வரையிலும், கார் பார்க்கில் பகுதியில் கோபுர நுழைவாயில் வரையிலும் செயல்பட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினரும், ஷட்டில் கார்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குனருமான சங்கர் வடபழனி முருகன் கோவில் பக்தர்களுக்கு இலவச சேவைக்காக, 11லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு பேட்டரி கார்களை வழங்கியுள்ளார்.  பேட்டரி கார் ஓட்டுநர்களுக்கான ஊதியம், பராமரிப்பு தொகையும் அந்நிறுவனமே மேற்கொள்கிறது. மாற்று திறனாளிகள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணி, கைக்குழந்தையுடன் வரும் பெண்கள் அழைத்து செல்லப்படுவர். இச்சேவை வாயிலாக தினசரி ஆயிரம் பக்தர்கள் பயன் பெறுவர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar