Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குச்சனூர் சனீஸ்வரர் கோவிலில் ஆடி முதல் சனி; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
குச்சனூர் சனீஸ்வரர் கோவிலில் ஆடி முதல் சனி; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2026
01:07

தேனி; சின்னமனூர் அருகே உள்ள புகழ்பெற்ற குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் பகவான் திருக்கோவிலில், ஆடி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


குச்சனூரில் சுரபி நதிக்கரையில் அமைந்துள்ள இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாத சனிவாரத் திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கோவிலில் கொடிமரம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், திருவிழா அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், ஆகம விதிப்படி ஆடி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் தடையின்றி வழிபாடு நடத்திட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஆடி மாத முதல் சனிக்கிழமையான இன்று அதிகாலை முதலே பக்தர்கள் குச்சனூர் கோவிலில் குவியத் தொடங்கினர்.‌ தற்போது சுரபி நதியில் தண்ணீர் வரத்து இல்லாததால், கோவில் நிர்வாகம் சார்பில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள குளியல் அறைகளில் பக்தர்கள் புனித நீராடினர். தொடர்ந்து, சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றியும், பொரி படைத்தும், காக்கை வடிவிலான மண் சிலைகளை காணிக்கையாக வைத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டு வருகின்றனர். இவ்விழாவின் முக்கிய நிகழ்வுகளாக நீலாதேவி - சனீஸ்வரர் பகவான் திருக்கல்யாண விழாவும், சோனை கருப்பண்ணசாமிக்கு மது படையல் மற்றும் கறி விருந்துடன் கூடிய ஆடி சனிவார நிறைவு விழாவும் அடுத்தடுத்து நடைபெற உள்ளன. ஆடி சனிக்கிழமையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.  பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்வதை உறுதி செய்ய, சின்னமனூர் காவல் நிலைய காவல்துறையினர் அங்கு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தென்காசி; சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
ஆடி மாத வளர்பிறை பஞ்சமி என்பது வராஹி அம்மனுக்கு உகந்த நாளாகும். தீய சக்திகளை அழித்து பக்தர்களை ... மேலும்
 
temple news
திருப்பதி ; ஆனிவார அஷ்டானத்தை முன்னிட்டு, நேற்று மாலை, மலையப்ப சுவாமி, தனது தேவியர்களான ஸ்ரீதேவி ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 20ம் தேதி ... மேலும்
 
temple news
ஒடிசா; ஒடிசாவில் ஒன்பது நாட்கள் நடைபெறும் வருடாந்திர பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரையில் பக்திமயமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar