Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் பெரியம்மன் கோவிலில் குண்டம் ... ஆடி முதல் செவ்வாய்; நத்தம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் ஆடி முதல் செவ்வாய்; நத்தம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவம் கருட கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவம் கருட கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2026
05:07

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழா கருட கொடியேற்றத்துடன் துவங்கியது.


பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பரமஸ்வாமி வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அஹாபில மடம் 45 மற்றும் 46வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயிலாகும். இங்கு இன்று காலை பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அப்போது கருட கொடியேற்றப்பட்டு அபிஷேகம் நடந்து, மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு அன்ன வாகனத்தில் பெருமாள் அமர்ந்து வீதி உலா வந்தார். தினமும் சிம்மம், சேஷம், கருடன், அனுமன் வாகனங்களில் அருள்பாலிப்பார். ஜூலை 26 இரவு 7:00 மணிக்கு யானை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி ஆண்டாள் மாலை மாற்றல் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் இரவு பூ பல்லக்கிலும், ஜூலை 28 காலை நவநீத கிருஷ்ணன் சேவை மற்றும் இரவு குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் சேவை சாதிப்பார். ஆடி தேரோட்டம் ரத வீதிகளில் ஜூலை 29 காலை நடக்க உள்ளது. ஜூலை 30 காலை தீர்த்தவாரி, இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar