ஆடிப்பெருக்கு தினத்தில் நதியோரம் உள்ள கோவில்களில் கன்னிப்பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர். சுமங்கலி பெண்கள் இதுபோன்று வழிபாடு நடத்தினால் அவர்களின் துணைவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். சப்த கன்னிகளை
உருவாக்கி ஆடிப் பெருக்கு வழிபாடு மேற்கொள்வதும் நல்ல பலனைத் தரும்.
இதேபோல் ஆடிப்பூரம் விழா கேரளாவில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் மிக அருமையாக கொண்டாடப்படும். சுப நிகழ்வுகள் ஏராளமாக நடைபெறுவதால் ஆடி மாதம் பல வகையிலும் சிறந்தது.
ஆடிப்பூரம் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கிய மான பண்டிகை. ஆடி மாதத்தில் (ஜூலை ஆகஸ்ட்) வரக்கூடிய இந்த பண்டிகை, பக்தர்களால் மிகச் சிறப்பாகக் கொண்டா டப்படுகிறது. இந்த பண்டிகை அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழா. தமிழ் மாதங்களில் நான்காவது மாத மாக வரும் ஆடி ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் நிகழும் நாளன்று அம்பாள் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.