பதிவு செய்த நாள்
30
ஜன
2013
11:01
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில், ஏகதின லட்சார்ச்சனை விழா நடந்தது.108 வைணவ திருத்தலங்களில், 63 வது தலமாக புகழ்பெற்ற இக்கோவிலில், ஏகதின லட்சார்ச்சனை விழா முறை, கடந்த 2011 ம் ஆண்டு துவக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஆண்டுதோறும் நடைபெறும் விழா, சமீபத்தில் நடந்தது. இதை முன்னிட்டு, ஸ்தலசயனப்பெருமாள் சிறப்பு அபிஷேகத்திற்கு பின், கல்கிரீடத்தில் அலங்கரிக்கப்பட்டு, நிலமங்கை தாயார், ஆண்டாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோருடன் மகாமண்டபத்தில் எழுந்தருளினார். திருப்பாவை சேவையுடன் சிறப்பு வழிபாடு மற்றும் காலை முதல் மாலை வரை, 10 ஆவர்த்தியாக லட்சார்ச்சனையும் நடந்தது. மாலை சுவாமி மற்றும் தாயார், தோளுக்கினியான் கேடய அலங்காரத்தில், ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி, வழிபாடும், ஊஞ்சல் சேவையும் நடந்தது. விழாவில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.