Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புல்லாணி கிராமங்களில் ... திருவண்ணாமலையில் ஆடி பவுர்ணமி கிரிவலம்; இரண்டாம் நாளாக குவிந்த பக்தர்கள் திருவண்ணாமலையில் ஆடி பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி பவுர்ணமி; காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆடி பவுர்ணமி; காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம்

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2026
03:07

காஞ்சிபுரம்; ஆடி மாத பௌர்ணமி ஒட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்க தேரினை வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.


சக்தி பீட ஸ்தலங்களில்  முதன்மையானதாக விளங்கும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், ஆடி மாத பௌர்ணமி ஒட்டி, தங்கத்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தங்கத்தேர் உற்சவத்தை ஒட்டி காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து,  நீல நிற பட்டு உடுத்தி தங்க கிரீடங்கள் திருவாபரணங்கள், மல்லிகைப்பூ, சம்பங்கி பூ, சாமந்திபூ கண்ணாடி வளையல் மாலைகள் அணிந்து, லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஆலய ஸ்ரீ காரியம் சுந்தரேஸ் ஐயர் சங்கல்பம் செய்து திருத்தேர் உற்சவத்தினை துவக்கி வைத்தார். பின்னர் மேளதாளங்கள் முழங்க உபயதாரர்கள், பக்தர்கள், தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்துச் செல்ல காஞ்சி காமாட்சி அம்மன், கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆடி மாதம் பௌர்ணமி ஒட்டி நடைபெற்ற தங்கத்தேர் உற்சவத்தில் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டம்,வெளி மாநிலம் என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து  கொண்டு "ஓம் சக்தி,பராசக்தி" கோஷமிட்டு காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர். விழா ஏற்பாடுகளை ஆலய மணியக்காரர் சூரி ஸ்தானிகர்கள் கோபி சாஸ்திரி. சங்கர் சாஸ்திரி. ஆகியோர்  சிறப்பாக செய்திருந்தனர்

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar