ரேணுகாம்பாள் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2026 10:08
கடலுார்: ரேணுகாம்பாள் முத்துமாரியம்மன் கோவிலில், செடல் உற்சவம் நடந்தது.
கடலுார், திருவந்திபுரம் பில்லாலி தொட்டி ரேணுகாம்பாள் முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம் கடந்த ஜூலை, 28 ம் தேதி துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, வீதியுலா நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. ஊரணி பொங்கல் வைத்து, மதியம் அம்மனுக்கு செடல் உற்சவம் நடந்தது. தொடர்ந்து, கெடிலம் ஆற்றில் இருந்து கரகம் எடுத்து பக்தர்கள் செடல் போட்டு ஊர்வலமாக வந்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இன்று மாலை 4:00 மணிக்கு கொடியிறக்கம், மஞ்சள் நீராட்டு விழா, இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.