காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 12 அடி முருகனுக்கு சந்தனகாப்பு அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2026 02:08
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரத்தில் உள்ள 12 அடி முருகன் சிலைக்கு ஆடி கிருத்திகை முன்னிட்டு 25 கிலோ சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. ஆடி கிருத்திகை முன்னிடு முருகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் ஆராதனை நடைபெற்று வருகின்றன. சுவாமி முருகருக்கு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பக்தர்கள் சுவாமி முருகனுக்கு விரதம் இருந்து முருகனே காவடி எடுத்து முருகனை தரிசித்து வருகின்றனர். அந்தவகையில் காஞ்சிபுரம் ஏகம்பரநாதர் கோவில் ராஜகோபுரத்தில் உள்ள 12 அடி முருகர் சிலைக்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் கிருத்திகை முன்னிடு சந்தனக்காப்பு தரிசனம் இந்தாண்டு வெகு விமர்சையாக நடைபெற்றது. வள்ளி, தெய்வானையுடன் கொண்ட 12 அடி ஆறுமுகம் கொண்ட முருகருக்கு 25 கிலோ சந்தனத்தில் சந்தனக்காப்பு செய்து பல்வேறு மலர்களால் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.